இப்பஞ்ச பூத உலகில் வேதப்படி இயல், இசை நாடகம் புராணம் இதிகாசம் போன்ற பெருமையுடைய நமது பாரத நாடு பல ரிஷிகளாலும் பதிவ்ருதா பத்தினிகளாலும் புனிதமாக தர்மத்தை காப்பாற்றியதும் மறுக்க இயலாது. அவ்வித பூமியில் மானிட பிறவி என்பது ஒருதடவையே ஆகும். அதுவும் கலிமகாத்மியபடி பல இன்னல்களுக்கு பின் மானிட குலத்தை காப்பாற்றிடவே பகவான் திருவருளால் யாகம் தானம் தவம் என்ற மூன்றும் பிரம்ம விஷ்ணு சிவனாக இருந்து அதனைவழி நடத்த வேதமாதாவாக ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அவதாரம் தசமஹா வித்யா என்னும் பத்து உருவமாக காளி- சூரியன், தாரா – சந்திரன், நீலா – செவ்வாய், ராஜமாதங்கி – புதன், திருபுரசுந்தரி – குரு, கமலாத்விக – சுக்கிரன், சின்னமஸ்தா – சனி, தூமாவதி – ராகு, பகளாமுகி – கேது, மஹாலக்ஷ்மி வடிவமாக நமது பீடத்தில் அமர்ந்து பிறவியில் மனிதர்கள் செய்யும் தவறை சொல்லி அதிலிருந்து விடுபட ஞானமார்க்கம், க்ரியா மார்க்கம், யோக மார்கமாக அமர்ந்து அருள் பாலித்து வருகிறாள். அவ்வித தேவிக்கு தீராத அனைத்து விதயமான கஷ்டங்களிலிருந்து விடுபட வேண்டி கீழ்க்கண்ட பூஜை முறைகளை அகில லோக ஸ்ரீ தச மஹா வித்யா பீடத்தில் நிகழ்த்தப் படுவதால் அன்பர்கள் இதில் கலந்துகொண்டு பயன் (அருள்) பெற வேண்டுகிறோம்.